Friday, August 12, 2022

பொன்னி நதி - பொன்னியின் செல்வன்

 



ஓ.. காவிரியால் நீர்மடிக்கு

அம்பரமாய் அணையெடுத்தான்


நீர் சத்தம் கேட்டதுமே

நெல் பூத்து நிக்கும்

உளி சத்தம் கேட்டதுமே

கல் பூத்து நிக்கும்


பகை சத்தம் கேட்டதுமே

வில் பூத்து நிக்கும்

சோழத்தின் பெருமை கூற

சொல் பூத்து நிக்கும்


பொன்னி நதி பாக்கணுமே

பொழுதுக்குள்ள

கன்னி பெண்கள் காணணுமே

காற்ற போல


பொட்டல் கடந்து

புழுதி கடந்து

தரிசு கடந்து

கரிசல் கடந்து

அந்தோ நான் இவ்வழகினிலே

காலம் மறந்ததென்ன


மண்ணே உன் மார்பில் கிடக்க

அச்சோ ஓர் ஆச முளைக்க

என் காலம் கனியாதோ

என் கால்கள் தணியாதோ


பொன்னி மகள்

லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா

பாடி செல்லும்


வீரா சோழ புரி

பார்த்து விரைவா நீ

நாவுகழகா தாவும் நதியாய்

சகா கனவை முடிடா


பொன்னி நதி பாக்கணுமே

பொழுதுக்குள்ள

கன்னி பெண்கள் காணணுமே

காற்ற போல


செக்க செகப்பி

நெஞ்சில் இருடி

ரெட்ட சுழச்சி

ஒட்டி இருடி


சோழ சிலைதான் இவளோ

சோல கருதாய் சிரிச்சா

ஈழ மின்னல் உன்னால

நானும் ரசிச்சிட ஆகாதா


கூடாதே

ஓகோகோ கடலுக்கேது ஓய்வு

கடமை இருக்குது எழுந்திரு

சீறி பாய்ந்திடும் அம்பாக

கால தங்கம் போனாலே

தம்பியே என்னாலும் வருமோடா


நஞ்சைகளே புஞ்சைகளே

ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

நஞ்சைகளே புஞ்சைகளே

ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே


பொன்னி நதி பாக்கணுமே

பொழுதுக்குள்ள

கன்னி பெண்கள் காணணுமே

காற்ற போல


செக்க செகப்பி

நெஞ்சில் இருடி

ரெட்ட சுழச்சி

ஒட்டி இருடி

அந்தோ நான் இவ்வழகினிலே

மதுர வீரன் - விருமன்

 




ஏய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே….ஏ…..

வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே…ஏ…..

மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
ம்ம் வர போறேன்டா
உன் கூட வரேன்டா
உன் கூட வரேன்டா

தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா

ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா

கொடை சாஞ்சேனே…..
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…ஈ….

ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..

மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக் கொல்லாதே…ஏ….

ஏ….எஹ் ஹே ஆந்தை முழி காரியே
அருவாமனை மாரியே
சொகமா என்னை வெட்டி தள்ளாதே

ஹ்ம்ம்…..ஒ….சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்

மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
நெத்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்

எடி பேச்சியே…..என்னை சாட்சியே
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேன்டி…ஈ….

ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..

ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..

கஞ்சா பூவு கண்ணால - விருமன்

 


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செலை உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செலை உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


ஒன் தட்டாங்காயி பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூரியனையும் ஒடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால


கருப்பட்டி கரைச்சு

செஞ்சு வச்ச செலையா

பச்சரிசி போட்ட

பொங்கப்பானை ஒலையா


கருப்பட்டி கரைச்சு

செஞ்சு வச்ச செலையா

பச்சரிசி போட்ட

பொங்கப்பானை ஒலையா


ஈரக்கொலைய சொரண்டியென்ன

கொல்லுறாயே கொலையா

ஈரக்கொலைய சொரண்டியென்ன

கொல்லுறாயே கொலையா


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செலை உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


அந்தி நடுச்சாமம் எழுப்பி

அந்த நட்சத்திரம் உலுப்பி

ஒன் மூக்குல காதுல

தோட மாட்டி தொங்க விடப்போறேன்….


அந்த ராத்திரியே கிள்ளி

கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி

ஒன் இமைய பூசும் கண்ணு மையா

மாத்திக்கொண்டு நானும் வாரேன்


மாடுக்குத்தி கிழிச்சாலும்

பொழச்சுக்குவேன்டி

ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா

என்ன செய்யுவேன்டி


சூரிக்கத்தி வீசுனாலும்

நிமிந்து நிப்பேன்டி

ஒன் சுண்டு விரல் பட்டு போன

சுணங்கி போவேன்டி


நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

திண்டு செமிப்பேன்டி

நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

திண்டு செமிப்பேன்டி


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செலை உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


ஒன் தட்டாங்காயி பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூரியனையும் ஒடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால...